×

அனுஷ்கா சொன்ன ‘தேங்ஸ்’

நடிகை அனுஷ்கா அமைதியாக, இனிமையாக பழக்கக்கூடியவர் என்பதால் திரையுலகில் அவரை சுவீட்டி என்று செல்லமாக அழைக்கின்றனர். அதை மீண்டும் தனது செயலால் நிரூபித்திருக்கிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா, தமன்னா ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். இதில் கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க அனுஷ்காவை கேட்டனர்.

அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். ஆனாலும் பட தரப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிலிருந்து சொந்த செலவில் வந்து நடித்து கொடுத்துவிட்டு சென்றார். ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்கா தான் சைரா நரசிம்ம ரெட்டி யார் என்பதை தொடங்கி வைப்பது போன்று படத்தில் காட்சி தொடங்கும்.

அதுமட்டுமல்லாமல் படம் வெளியான பிறகு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த அனுஷ்கா,’ நான் நடித்த கதாபாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு நன்றி. இந்த நம்பமுடியாத பயணத்திற்காக ராம்சரண், சிரஞ்சீவி, இயக்குனர் சுரேந்தர் ரெட்டி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி’ என தெரிவித்திருக்கிறார்.

Tags : Anushka ,
× RELATED மலையாளத்தில் அனுஷ்காவின் முதல் படம்: பேய் வேடத்தில் நடிக்கிறார்