×

விஜய்யின் ‘பிகில்’ டீசர் எப்போது?

அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் பிகில். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் டீஸர் எதுவும் வராததால் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனத்திடம், ‘டீஸர் எப்போது வெளிவரும்’ என்று கேட்டு தொல்லை செய்து வந்தனர். இதையடுத்து டீஸர் வெளியிடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 12ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிகில் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. அங்கு பிகில் படத்துக்கு விசில் என பெயரிடப்பட்டுள்ளது.

Tags : Vijay ,
× RELATED 200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி