×

தல, தளபதி குறித்து ஒற்றை வார்த்தையில் குறிப்பிட்ட ஷாரூக்

நடிகர்கள் விஜய், அஜித், தனுஷ் குறித்து ஒற்றை வார்த்தையில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் பதிலளித்துள்ளார். பிரபலங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது இப்போது மிகவும் எளிதான விஷயம். அதிலும் டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் ரசிகர்களிடம் நெருங்கி விடுகிறார்கள். ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஷாரூக் கான். அதன்படி, இன்று காலையில் தனது ரசிகர்களுடன் உரையாடினார்.

இதில் சில தமிழ் சினிமா ரசிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் ஒரு வரியில் பதிலளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த ஷாரூக் கான் விஜய் ஒரு அற்புதமான மனிதர் என்றும், அஜித் நண்பர் என்றும், தனுஷ் தான் நேசிக்கும் ஒரு நபர் என்று தெரிவித்தார். நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு "நடிப்பேன். ஏனென்றால் அந்த மொழி எனக்கு நன்றாகப் பரிச்சயமாகிவிட்டது என்று ஷாரூக் கான் பதிலளித்தார்.

Tags : Shah Rukh ,commander ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...