சம்பள பாக்கி ஷூட்டிங் வர நயன்தாரா மறுப்பு?

சம்பள பாக்கி இருந்ததால் கடைசி நாள் ஷூட்டிங்கில் பங்கேற்க நயன்தாரா மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியுடன் தர்பார் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க முன்பணம் பெற்ற நயன்தாரா, மீதியை கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு முன்பாக பெற்றுக்கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வழக்கமாக டப்பிங் பேசும்போது சம்பள பாக்கி தந்துவிடுவார்கள். இதில் நயன்தாராவுக்கு இன்னொருவர் டப்பிங் பேசுவதால், கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு முன்பு சம்பள பாக்கி தர முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சம்பள பாக்கி வராததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர நயன்தாரா மறுத்ததாகவும் முழு சம்பளம் தந்தால்தான் நடிக்க வருவேன் என கூறியதாகவும் தகவல் பரவியுள்ளது. பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் அவகாசம் கேட்டு, மீதி தொகை அளிப்பது குறித்து நயன்தாராவிடம் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகே அவர் ஷூட்டிங்கிற்கு வந்தாராம்.

Tags : Nayanthara ,
× RELATED ஏமாற்றப்பட்டதால் கெடுபிடிக்காரரான நயன்தாரா