×

தமன்னாவுக்கு பெரிய மோதிரம் கிஃப்ட்

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நயன்தாரா, தமன்னா, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சிரஞ்சீவி நடிப்பை போலவே தமன்னாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது. மேலும் இப்படத்தின புரமோஷன் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நடந்தது.

அவற்றில் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினருடன் தமன்னா கலந்துகொண்டார். நயன்தாராவை பலமுறை அழைத்தும் அவர் பங்கேற்க மறுத்துவிட்டார். வழக்கமாக தான் நடிக்கும் படமாக இருந்தாலும் அப்படத்தின் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்ற பாலிசியை கடைபிடித்து வருகிறாராம் நயன்தாரா. அதன் காரணமாகவே சிரஞ்சீவி படத்திலும், சமீபத்தில் நடந்த விஜய்யின் பிகில் படத்திலும் அவர் பங்கேற்கவில்லையாம்.

ரஜினியின் தர்பார் படத்துக்காவது இந்த பாலிசியை நயன்தாரா மாற்றிக்கொள்வாரா என்பது இனிதான் தெரியவரும். சைரா... பட புரமோஷன் நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்றது அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் சரணின் மனைவி உபசனாவும், தமன்னாவும் நெருங்கிய தோழிகள்.

அவர் தமன்னாவுக்கு கண்களை கவரும் வகையில் விலை உயர்ந்த மிகப்பெரிய கிரிஸ்டல் மோதிரம் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இதுபற்றி உபசன்னா கூறும்போது,’ தமன்னாவுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்படும் கிப்ட் இந்த மோதிரம். இத்தனை நாள் படப்பிடிப்பு, புரமோஷனில் உடனிருந்த தமன்னாவை தற்போது ரொம்பவே மிஸ் செய்கிறேன். விரைவில் இருவரும் சந்திப்போம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்