×

தமிழ்நாட்டின் பெருமையை ஜப்பானில் விதைத்த தங்க மங்கை மனிஷா; சென்னையில் உற்சாக வரவேற்பு..!

சென்னை: உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் அக்டோபர் 31ம் தேதி முதல் நவ. 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த மனிஷா ராமதாஸ், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். ஈரோட்டை ருத்திக் ரகுபதி கலப்பு இரட்டையர் பிரிவில் 2 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ஓசூரை சேர்ந்த நிதிஸ்ரீ ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த தங்க மங்கை மனிஷாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிஷா; வருகின்ற 2024ம் ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் பாரா பேட்மிண்டனில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. அடுத்த வருடம் ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்வேன் என்று கூறினார்….

The post தமிழ்நாட்டின் பெருமையை ஜப்பானில் விதைத்த தங்க மங்கை மனிஷா; சென்னையில் உற்சாக வரவேற்பு..! appeared first on Dinakaran.

Tags : Manisha ,Tamil Nadu ,Japan ,Chennai ,Chennai airport ,World Para Badminton Championship ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...