×

கபடி பயிற்சி பெறும் தமன்னா

தமிழில் விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்திலும், பெட்ரோமாக்ஸ் என்ற படத்திலும், தெலுங்கில் தட் ஈஸ் மகாலட்சுமி படத்திலும் நடித்து வரும் தமன்னா, தெலுங்கில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சம்பத் நந்தி இயக்கும் இப்படம், கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. கபடி பயிற்சியாளர் வேடத்தில் தமன்னா நடிக்கிறார். இதற்காக அவர் கபடி விளையாடி பயிற்சி பெறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கபடி விளையாட்டை மையப்படுத்திய கதை இது. எல்லா மொழிகளிலும் ஏராளமான படங்களில் நான் நடித்திருந்தாலும், இதில் ஏற்றுள்ள பயிற்சியாளர் வேடம் மிகவும் வித்தியாசமானது. இதை நான்  சிறந்த முறையில் நடிப்பதற்காக தற்போது கடினமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன்’ என்றார்.

Tags : Tamanna ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...