×

பாண்டிச்சேரியில் பவனிவரும் ‘ஹாட்பேக் கேட்டரிங்’

வீட்டுச் செய்முறை உணவு எல்லா நாளுமேவீட்டுமுறை உணவை வாடிக்கையாளர்களுடைய இடமான வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என தெர்மகோல் ஹாட் பேக்கில் அடைத்து சுடச்சுட டெலிவரி செய்கின்றனர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ‘ஹாட் பேக் கேட்டரிங்’ நிறுவனத்தினர். அதன் உரிமையாளர் சிவகாமி தேவநாதனிடம் பேசியபோது.கணவன் மனைவி என இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்கள், சமையல் செய்ய சிரமப்படுற வயதான தம்பதிகள், படிப்பு மற்றும் வேலைக்காக பாண்டிச்சேரியில் தங்கியிருப்பவர்களுக்கு நாங்கள் பெரும் உதவியாக இருப்போம். தவிர, ஃப்ரான்ஸில் செட்டிலாகி பாண்டிச்சேரியில் தனித்து வாழும் சீனியர் சிட்டிசன்கள் மருத்துவ மாணவர்கள், அதன் ஊழியர்களும் எங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கின்றார்கள். உணவை ஏதோ ஒரு உணவகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு வந்து நம் கரங்களில் சேர்ப்பவர்கள் இல்லை நாங்கள். எங்களோட ஹாட்பேக் கேட்டரிங் நோக்கம் வாடிக்கையாளர்களின் உடல்நலத்தை பாதிக்காத உணவைத் தர வேண்டும் என்கிற எண்ணத்தில், ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கி நாங்களே அதனை ருசிபட வீட்டுபக்குவமுறைபடி சமைத்து தருகிறோம்” என்கிறார். எங்களது சுத்த சைவம். ஒரு ஹாட்பேக் லன்ஞ் என்பது 650 கிராம் ஒரு நபருக்கு மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு வெரைட்டி ரெசிபி இருக்கும். அத்துடன், ரெகுலர் மீல்ஸ்சும் உண்டு. கஸ்டமர் தேவைக்கு ஏற்பவும், அவர்கள் விருப்பம் கேட்டும்  சமைச்சு தறோம். சாப்பிடதையே நாங்கள் தினம் சாப்புடுகிறோம், எங்களுக்கு போரடிக்கிது என்கிற ஃபீல் வாடிக்கையாளர்களுக்கு வராமலும் பார்த்துக்கொள்வோம். ஒரு நாள் வழங்கப்பட்ட உணவு மறுநாள் மெனுவில் கண்டிப்பாக இடம்பெறாது. ஒரே வறுவல், ஒரே பொரியல்னு பத்து நாளைக்குள் அதை திரும்பவும் இடம்பெறச் செய்வதில்லை. எத்தனை நாள் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிட்ட உணர்வே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். சாம்பார், காரக்குழம்பு, கூட்டு, பொரியல், வறுவல், ரசம், மோர் குழம்பு அப்பளம், ஊறுகாய் என இடம்பெறும் வாழைத் தண்டு வாழைப் பூன்னு வீட்டுச் சமையலில் இடம்பெறும் உணவுப் பொருட்களையும் இணைப்போம். டிஃபனுக்கு ரெகுலரா இட்லி உண்டு. கூடவே சப்பாத்தி, பூரி, கிச்சடி, ஆப்பம், இடியாப்பம் கல்தோசை, செட்தோசை வடைகறி வித்தியாசமா கொடுப்போம். இரவில் இட்லி சப்பாத்தி ரெகுலராக இருக்கும். அத்துடன் உடலுக்கு உகந்த சிறுதானியங்களான குதிரைவாலி, சாமை போன்ற உணவுகளையும் இரவு உணவில் இணைத்துவிடுவோம். நாள் ஒன்றுக்கு 300க்கும் அதிகமான ஃபுட் டெலிவரி செய்கிறோம். இதில் ரெகுலர் கஸ்டமர்கள் மட்டுமே எங்களிடம் 100 தாண்டும். பாண்டிச்சேரி முழுவதுமே உணவை டெலிவரி செய்கின்றோம். 15 கிலோமீட்டர் தாண்டி வாடிக்கையாளர் இருந்தாலும் சூடாக உணவு சென்று கொடுப்போம். காலை 8 மணிக்குள்ளும் மதியம் 1 மணிக்குள்ளும் இரவு டின்னர் 7 மணிக்குள்ளும் டெலிவரி கொடுக்கப்பட்டு விடும். ஞாயிறு தவிர்த்து எல்லா நாட்களிலும், மூன்று வேளையும், முக்கிய பண்டிகை நாட்களும் எங்களிடத்தில் ஹோம் டெலிவரி உண்டு. டெலிவரிக்கு நாங்களே ஆள் வைத்திருப்பதால் சமைத்த உணவு நேரத்திற்கு கஸ்டமர்களை சென்றடைகிறது” என்றவர், எந்த ஒரு சூழலிலும், இயற்கை பேரிடரிலும் வாடிக்கையாளர்களிடம் உணவை கொண்டுபோய் சேர்க்கும், திறமைமிக்க டெலிவரி நபர்களோடு, எங்கள் கேட்டரிங் சர்வீஸில் 15க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.எங்கள் தயாரிப்பு உணவை உண்பவர்களுக்கு எந்தவிதமான உடல் உபாதையும் வரக் கூடாது, அதே நேரம்  சூடான உணவை சர்வீஸ் செய்வது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். குவாலிட்டியையும், ருசியையும் ஒரேமாதிரி மெயின்டெயின் செய்கிறோம். எண்ணெய், காரத்தையும் உணவில் அதிகமாகச் சேர்ப்பதில்லை. எல்லாமே மிதமாக சமையல் முறையா இருக்கும். ப்ளாஸ்டிக் தவிர்த்து, உணவை தெர்மோ ஹாட் பேக்கில் பேக் செய்து டெலிவரி செய்தாலும், ஹாட் பேக்கிற்காக வாடிக்கையாளர்களிடம் முன்பணம் எதையும் நாங்கள் பெறுவதில்லை. திரும்பவும் வாடிக்கையாளரிடத்தில் இருந்து பெறப்படும் ஹாட் பேக்குகளை ஹாட் வாட்டரில் சுத்தம் செய்து, வெயிலில் நன்றாகக் காயவைத்தே பிறகே அடுத்த பேக்கிங்கிற்கு தயாராகும்.வாடிக்கையாளர்களிடம் வாரத்திற்கு எனில் மூன்று வேளைக்கு 1650ம், மாதம் எனில் 6000 ம் பெறுகிறோம். தேவைப் படும் நாட்களில் மட்டும வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்களும் எங்களிடம் இருக்கிறார்கள். ரெகுலர் வாடிக்கையாளர்கள் இடையில் ஊருக்கு செல்ல நேர்தால், அந்த நாட்களை குறித்து வைத்து, அடுத்த மாதத்தில் அட்ஜஸ்ட் செய்து கொடுத்துவிடுவோம்’’ என்றார் சிவகாமி தேவநாதன்.டப்பா வாலாக்கள்நம்ம ஊரில் வேலைக்குப் போகிறவர்கள், மதிய உணவுக்கு என்ன செய்கிறார்கள்? காலையில் அலுவலகத்துக்குப் புறப்படுகிறபோதே, மதிய உணவையும் தயார்செய்து, கையில் எடுத்துச் செல்கின்றார்கள்  இல்லை எனில், அலுவலகக் கேண்டீன், மெஸ், ஹோட்டல் செல்கின்றார்கள். காலையில் அலுவலகம் செல்லும்போதே மதிய உணவையும் எடுத்துச்செல்வது நம்மூர் கலாசாரம். ஆனால், மும்பையில் வேலைக்குப் போகிறவர்கள் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போய்விட, அவர்களது குடும்பத்தினர், வீட்டுச் சாப்பாட்டை பொறுமையாக சுடச்சுட சமைத்து டிபன் கேரியரில் வைத்து ஆட்கள் மூலமாக அவரவர்களின் அலுவலகத்துக்கோ பள்ளிக்கோ அனுப்பிவைக்கிறார்கள். அவர்களின் டிபன் கேரியர்கள் அந்தந்த வீடுகளுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. வீட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்பவர்கள் டப்பாவாலாக்கள். 130 வருடமாக இந்தப்பணியை பலரும் செய்துவருகின்றார்கள்….

The post பாண்டிச்சேரியில் பவனிவரும் ‘ஹாட்பேக் கேட்டரிங்’ appeared first on Dinakaran.

Tags : Bhavaniva ,Hotback Catering ,Pondicherry ,Thermocol Hot ,
× RELATED அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி...