×

நவம்பருக்கு தள்ளிப்போனது தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் 2017ம் ஆண்டில் முடிந்துவிட்டது. பைனான்ஸ் பிரச்னையால் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரிலீசுக்கு ஒரு நாள் முன்பாக அதே பிரச்னைகளால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பற்றி கவுதம் மேனன் கூறும்போது, ‘தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. நவம்பர் 15ம் தேதி கண்டிப்பாக படம் திரைக்கு வரும்’ என்றார்.

Tags : Dhanush ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்