×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி ஏ.சி.என். விஜயபாலன், சீர்காழி தொகுதி து. மூர்த்தி ஆகியோர் தலைமையில், நாகை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான செம்பை த.சண்முகம் –  அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம். ரமேஷ், செம்பனார்கோவில் சா. செல்வராஜ் ஆகியோர்திமுகவில் இணைந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (8.11.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மயிலாடுதுறை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி ஏ.சி.என். விஜயபாலன், சீர்காழி தொகுதி து. மூர்த்தி ஆகியோர் தலைமையில் நாகை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான செம்பை த.சண்முகம் – அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம். ரமேஷ், செம்பனார்கோவில் சா. செல்வராஜ், சுரேஷ்குமார், சரவணன் ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தனர்.கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் நிவேதா எம்.முருகன், எம்.எல்.ஏ., செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.அன்பழகன், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல்மாலிக், சீர்காழி நகரச் செயலாளர் எம்.சுப்புராயன், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்….

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ADMK ,DMK ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Tamil Nadu ,M.K.Stalin ,Mayiladuthurai District AIADMK ,Constituency ,A.C.N. ,Sirkazhi Constituency ,M.K.Stal ,
× RELATED 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர்...