×

தளபதி 64 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

தளபதி 64 படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 64வது படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். இதில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அவரது வேடம் வில்லத்தனம் நிறைந்தது என்று கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்,  மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் ஹீரோவாக நடித்தவர். மற்றொரு கேரக்டரில் சாந்தனு நடிக்க உள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா  மோகனன் நடிக்கிறார். இவர் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர்.

Tags : Commander ,shooting ,pooja ,
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...