×

நெருக்கமான காட்சி; ஹீரோவுக்கு சம்யுக்தா அட்வைஸ்

மொரட்டு சிங்கிள் இயக்கத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோருடன் பப்பி என்கிற பிங்கி நாய் நடித்துள்ள படம், பப்பி. தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசை அமைத்துள்ளார். படம் குறித்து வருண் கூறியதாவது: இதற்குமுன் சில படங்களில் முக்கியமான கேரக்டர்களில்  நடித்திருந்தேன். இப்போது நான் தனி ஹீரோவாக நடித்துள்ள படம் இது.

டிரைலரை பார்க்கும்போது, இது அடல்ட் காமெடி படமாக இருக்குமோ என்று சந்தேகம் வரும். ஆனால், படத்தின் கதை வேறொரு கோணத்தில் கையாளப்பட்டுள்ளது. நானும்,  சம்யுக்தாவும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கும்போது, அவர் செம கூலாக  இருந்தார். நான்தான் தடுமாறினேன். காரணம், இந்த படத்தில் நடிப்பதற்கு முன் நானும், அவரும் நன்கு பழக ஆரம்பித்தோம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர், திடீரென்று சம்யுக்தாவுடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்று  சொன்னபோது, நல்ல தோழி ஒருவருடன் எப்படி இவ்வளவு நெருக்கமாக நடிப்பது என்று தயங்கினேன். பிறகு என் தயக்கத்தை சம்யுக்தா போக்கினார். ‘இது சினிமா. நாம் சேர்ந்து நடிக்கிறோம். அவ்வளவுதான்’ என்று அவர் சொன்ன பிறகுதான் தைரியம்  வந்தது. டைரக்டர் எதிர்பார்த்தபடி நடித்தேன்.

Tags :
× RELATED அமானுஷ்ய கதை பிஹைண்ட்