×

ஷூட்டிங் நடத்த இந்தியா வந்தார் கிறிஸ்டோபர் நோலன்

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். தனது அடுத்த படமான டெனெட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்த உள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வந்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இந்த படத்தில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா, பல இந்தி படங்களில் நடித்துள்ள டென்ஜில் ஸ்மித் நடிக்கிறார்கள்.

படத்தில் டிம்பிள் கபாடியாவின் கணவராக டென்ஜில் ஸ்மித் நடிக்கிறார். மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இதன் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார் நோலன். 6 மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்து இங்கு படமாக்க வேண்டிய காட்சிகளை எடுக்க நோலன் திட்டமிட்டுள்ளார்.

Tags : Christopher Nolan ,India ,
× RELATED ஜப்பானில் வெளியாகும் ஓப்பன்ஹெய்மர்...