×

‘நோ மேக் அப்’ பாலிசியில் ஹீரோயின்கள்...

நடிகைகளை மேக் அப் இல்லாமல் பாக்கணுமே... என்று போகிற போக்கில் சிலர் கிண்டலாக பேசுவதுண்டு. ஆனால் தற்போதுள்ள இளவட்ட நடிகைகளிடையே புதிய பாலிசி ஒன்று உருவாகியிருக்கிறது. மேக் அப் அணியாமல் இயற்கையான தோற்றத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அமலாபால், அனுபாமா பரமேஸ்வரன், காஜல் அகர்வால், அனு இமானுவேல் போன்றவர்கள் சமீபத்தில் மேக் அப் அணியாத இயற்கையான தோற்ற ஸ்டில்களை பகிர்ந்தனர்.

அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் திரிஷா. சமீபத்தில் நீச்சல் குளத்துக்கு சிங்கிள் பீஸ் ஸ்விம் சூட்டுடன் சென்ற திரிஷா முன்னதாக மேக் அப் அணியாத தனது இயற்கை தோற்றத்துடன் ஸ்டில் எடுத்து பகிர்ந்திருக்கிறார். திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆன பிறகும் தன்னை அழகான தோற்றத்துடன் பராமரித்து வருகிறார்.

தனிப்படங்களாக கவர்ச்சியான தோற்றத்தில் திரிஷா புகைப்படங்களை வெளியிட்டாலும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பதில்லையே... கவர்ச்சி காட்டி அவர் நடிப்பதில்லையா அல்லது அதுபோன்ற வேடங்களை அவருக்கு யாரும் தருவதில்லையா,,, இதுதான் எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது என்று ரசிகர்கள் சந்தேக கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Heroines ,
× RELATED தமிழக வீரர் குகேஷின் வெற்றியால்...