×

கல்யாண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. அவரது குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவிய வண்ணமிருந்தது. சில வாரங்களுக்குமுன் சென்னை வந்த அவரிடம், ‘உங்களுக்கு கல்யாணமா?’ என்றபோது, ‘செய்யாலம்னுதான் பாக்கறேன்.. மாப்பிள்ளை கிடைக்கவில்லை.. யாராவது இருந்தா சொல்றீங்களா?’ என்று நய்யாண்டியாக பதில் அளித்தார். ஆனாலும் அவரது திருமண கிசுகிசு தீர்ந்தபாடில்லை. சிரஞ்சீவியுடன், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் தமன்னா நடித்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ஆந்திரா, தமிழ்நாடு என மாறி மாறி நடந்து வருகிறது. சிரஞ்சீவி, தமன்னா இதில் பங்கேற்கின்றனர். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நயன்தாரா மட்டும் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார். இதே புறக்கணிப்பு வேலையைத்தான் விஜய்யின் பிகில் படத்துக்கும் நயன்தாரா செய்திருந்தார்.

சைரா.. பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா அப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கூறினார். மேலும் அவர் கூறும்போது,’கொஞ்ச நாட்களாகவே எனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக வதந்தி வந்துகொண்டிருக்கிறது. யாரோ சிலர் தேவையில்லாமல் வதந்திகளை கிளப்பிவிடுகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை. என்னைப்பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான். நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை’ என்றார்.

Tags : Tamanna ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா