×

டோலிவுட்டில் திரு

விஷால் நடிப்பில் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர், திரு. சமீபத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடித்து இருந்த சந்திரமவுலி என்ற படத்தை இயக்கினார். இதற்கிடையே டோலிவுட்டுக்கு சென்ற அவர், தனது முதல் தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார்.

சாணக்யா என்ற இப்படத்தில் கோபிசந்த் ஹீரோ. மெஹ்ரின் பிர்சோடா, ஜரீன்கான் ஹீரோயின்கள். பாலிவுட் நடிகை ஜரீன் கான், இப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார். ஆக்‌ஷன் திரில்லர் படமான இதை முடித்துவிட்டு, மீண்டும் கோலிவுட் திரும்ப உள்ளதாக இயக்குனர் திரு சொன்னார்.

Tags : Mr. ,Toledo ,
× RELATED முருங்கப்பட்டியில் வேளாண் கல்லூரி...