×

அரையிறுதியில் ஸ்வியாடெக், கார்சியா

ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ.பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவி அரையிறுதியில் விளையாட நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) தகுதி பெற்றனர். கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவின் கோரி காஃபுடன் மோதிய ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை எதிர்கொண்ட கார்சியா 4-6, 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 2 மணி, 27 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஸ்வியாடெக் – சபலென்கா, கார்சியா – சாக்கரி மோதுகின்றனர். …

The post அரையிறுதியில் ஸ்வியாடெக், கார்சியா appeared first on Dinakaran.

Tags : Sviatek ,Garcia ,Fort Worth ,Ika Swiadek ,Poland ,WTA Finals tennis series ,Swiadek ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா