ஜோடியாக நடிக்க தயங்கும் நடிகைகள் - அப்புக்குட்டி உருக்கம்

கதையின் நாயகனாக அப்புக்குட்டி நடித்துள்ள படம், வாழ்க விவசாயி. வசுந்தரா கஷ்யப் ஹீரோயின். கதிரேசன் தயாரித்துள்ளார். பி.எல்.பொன்னி மோகன் இயக்கியுள்ளார். ஜெய்கிருஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அப்புக்குட்டி பேசியதாவது: சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களாகி விட்டது.

எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என் பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள். சொந்தமாக நிலம் இருந்தால் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்கு ஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால்  முடியவில்லை. நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று நினைத்து, என்  தேவைகளுக்காக சென்னைக்கு வந்தேன்.

ஹீரோவாகவும் நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக  நடிக்க பல நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகன்  இல்லையா? என்னையும் ஒரு நடிகராக நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாதா? இந்த  படத்தில் என்னுடன் நடித்த வசுந்தராவை பாராட்டுகிறேன். இனி என்னுடன் நடிக்க  பல நடிகைகள் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

Tags : Actresses ,Appukutti ,
× RELATED நடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை