×

மக்களிடம் ஆர்வமில்லை 5 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் காலாவதி

ஐதராபாத்: கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டாததால், அடுத்தாண்டு தொடக்கத்தில் 5 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் காலாவதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதியும் செய்தது. இந்த தடுப்பூசி 2 டோஸ் மற்றும் பூஸ்டர் டோசாக நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் கோவாக்சின் உட்பட 219.71 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில், மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்து விட்டதால், தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி காலாவதியாக உள்ளது. இதனால், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் இதேநிலைதான் உள்ளது. ஆனால், காலாவதியாகும் அதன்  தடுப்பூசி எண்ணிக்கை இதை விட குறைவு….

The post மக்களிடம் ஆர்வமில்லை 5 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் காலாவதி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,
× RELATED ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்;...