×

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்திற்கு எதிரான பேராட்டம்; கண்டனம் தெரிவித்த படக்குழு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த மலைக்கோட்டையில் சிவனடியார்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் சமீபத்தில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத போது படப்பிடிப்பிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மலைக்கோட்டையில் இருந்து பட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்த படம் திப்பு சுல்தான் கதை பின்னணியை கொண்டு உருவாகும் படமோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை சொல்லும் படமோ இல்லை” என்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “சமீப காலங்களாக சுய விளம்பரம் நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளூம் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கைகுழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவும் செய்யும் அந்த திரைப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது.

இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைபடுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்துகொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : rally ,group ,Karti's Sultan ,
× RELATED பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி