×

விஷ்ணு விஷாலுடன் இணையும் பிரியா பவானி

விஷ்ணு விஷால், ரெஜினா நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கியவர் செல்லா அய்யாவு. முழுநீள காமெடி கதை படமாக இது உருவாகி இருந்தது. அவர் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

விஷ்ணுவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பேமிலி என்டர்டெயினர் ஜானரில் இந்த படம் உருவாக இருக்கிறது. படத்தின் தலைப்பு, மற்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Tags : Priya Bhavani ,Vishnu Vishal ,
× RELATED பேய்களுக்கு நடுவில் இருக்கிறேன்; பிரியா பவானி லக லக