×

வக்பு வாரிய சொத்துக்கள் கணக்கெடுப்பு இமாச்சலில் பொது சிவில் சட்டம்: பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், வக்பு வாரிய சொத்துக்களை கணக்கெடுத்து சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும் என வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.இமாச்சல பிரதேச மாநிலத்தில் 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாநிலத்தில் பாஜ, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது பாஜ ஆட்சி நடக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், பாஜவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.  சிம்லாவில் பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், பாஜ 11 அம்ச வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவை,*  பாஜ ஆட்சிக்கு வந்தால், இமாச்சலில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இதற்காக கமிட்டி அமைத்து பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்படும்.*  பெண்களுக்கு அரசு வேலையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.*  ஏழை பெண்களுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.*  ஏழை குடும்பங்களுக்கு திருமண நிதி உதவி உயர்த்தப்படும்.*  8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.*  6-12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிளும், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டியும் வழங்கப்படும்.*  வக்பு வாரிய சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுக்கப்படும்.*  சக்தி’ திட்டத்தின் கீழ் அனைத்து பிரசித்தி பெற்ற கோயில்களை சுற்றி ரூ. 12,000 கோடியில் அடுத்த 10 ஆண்டில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.*  விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் ரூ. 6,000 உதவித் தொகையுடன் ரூ. 3000 கூடுதல் நிதி உதவி வழங்கப்படும். * ஆப்பிள் பேக்கிங்குக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post வக்பு வாரிய சொத்துக்கள் கணக்கெடுப்பு இமாச்சலில் பொது சிவில் சட்டம்: பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Himachal ,BJP ,Shimla ,Himachal Pradesh Assembly elections ,Wakpu Board ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...