×

சிக்கராயபுரம் கல்குவாரி புதிய நீர் தேக்கமாக மாறுகிறது: அமைச்சர்கள் நேரில் ஆய்வு

சென்னை: சிக்கராயபுரம் கல்குவாரியில் அதிகளவு நீர் தேங்குவதும், அதை குடிநீர் பயன்பாட்டிற்கு உதவுவதால், அந்த கல்குவாரி புதிய நீர் தேக்கமாக மாற்றப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.கேடை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வற்றிப்போனால், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தேங்கி இருக்கும் தண்ணீரை எடுத்து, அதனை சுத்திகரிப்பு செய்து, சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏ செல்வப் பெருந்தகை ஆகியோர் சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை எவ்வாறு சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைக்கு கொண்டு செல்வது மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையை எவ்வாறு மிகப்பெரிய நீர்த்தேக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு எவ்வாறு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுவது என்பது குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : பொதுப்பணி துறை சார்பில் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள கூடுதல் தண்ணீரை இங்கு கொண்டு வந்து தேக்கி வைத்து, குடிநீராக மாற்றி அனுப்பி வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தது போல் மழைநீரை தேக்கி வைக்கும் பெரிய ஏரிகளை உண்டாக்க வேண்டும் . இங்கு 130 ஏக்கர் அரசு நிலம் 50 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. அவர்களின் அனுமதி பெற்று உரிய தொகையை செலுத்தி 250 ஏக்கரில் பெரிய நீர்த்தேக்கமாக மாற்ற பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியை ஒதுக்கி, பெரிய நீர்த்தேக்கம் உண்டாக்குவதற்காக பார்வையிட்டுள்ளோம். இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அனுமதி பெற்று தருவோம். மேலும், இங்கிருந்து குன்றத்தூர், மாங்காடு பகுதிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கொடுக்கும் பணி செய்ய உள்ளோம். அதற்கான பணிகள் யாவும் தொடங்கிவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post சிக்கராயபுரம் கல்குவாரி புதிய நீர் தேக்கமாக மாறுகிறது: அமைச்சர்கள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sikkarayapuram Kalquari ,CHENNAI ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...