×

சமந்தா சொன்ன படுக்கை அறை ரகசியம்....

நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகும் கவர்ச்சியாக நடிப்பதில் குறைவைக்கவில்லை சமந்தா. குழந்தை பெற்றுக்கொள்ளப்போவது எப்போது என்று கேட்டால்தான் சரியாக பதில் சொல்லாமல் கம்பி நீட்டிவிடுகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படுக்கை அறை ரகசியத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார் சமந்தா.

‘படுக்கை அறையில் நாக சைதன்யாவுடன் உங்களது கெமிஸ்ட்ரி எப்படி?’ என்று சமந்தாவிடம் கேட்டபோது தயக்கம் இன்றி பதில் அளித்தார். ‘நாக சைதன்யாவுக்கு ஒரு முதல் மனைவி இருக்கிறார். நான் எப்போது நெருங்கினாலும் அந்த மனைவி குறுக்கே வந்துவிடுவார். அவரது முதல் மனைவி தலையணைதான். எங்கள் இருவருக்கும் இடையில் தலையணைதான் தடங்களாக இருக்கும்.

நான் சைதன்யாவுக்கு முத்தமிட நெருங்கினாலும் எங்கள் இருவருக்கும் இடையில் தலையணை இருக்கும். இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன். எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் அதிகமாகவே படுக்கை அறை ரகசியத்தை சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்’ என்றபடி எஸ்ஸானார் சமந்தா.

Tags : Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி