×

செல்பி எடுக்க கற்றுத்தந்த நயன்

செல்போனில் ஃபிரன்ட் கேமரா வந்த நாள் முதல் செல்பி மோகம் பெருகிவிட்டது. சில சமயம் இது நட்சத்திரங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் பலருக்கு செல்பி எடுக்கும் கலை தெரியவில்லை. நடிகை நயன்தாரா, காதலன் விக்னேஷ்சிவனுடன் விதவிதமாக செல்பி படங்கள் எடுத்து பகிர்கிறார். தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பிறகு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

அப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். நட்பு வட்டாரமாக இணைந்த படக்குழுவினர் சீனியரான நயன்தாராவிடம் சற்று தள்ளி நின்றே பேசினர். ஆனால் அவர்களுடன் சகஜமாக பழகி தன்னையும் இளவட்ட பட்டாளத்துடன் இணைத்துக்கொண்டார் நயன்தாரா.

அவருடன் பட குழுவினர் செல்பி எடுத்தனர். நிவின்பாலி செல்பி எடுக்க மற்ற 4 பேரும் இப்படியும் அப்படியுமாக விலகி நின்றனர். உடனே நயன்தாரா, ‘ஒரு செல்பி எடுக்கத் தெரியுதா?’ என்றபடி நால்வரையும் வரிசையாக நிறுத்தி செல்பி எடுக்க தோதாக நிற்க வைத்தார். நயன்தாரா செல்பி எடுக்க கற்றுத் தந்த வீடியோ நெட்டில் வெளியாகி உள்ளது.

Tags : Nayan ,
× RELATED சிக்லெட் 2கே கிட்ஸ்