×

தர்பாரில் நடிக்க இந்துஜா மறுப்பு?

தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இந்துஜா மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் படம் தர்பார். இதில் மும்பையில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தில் வரும் ஒரு கேரக்டருக்காக இந்துஜாவிடம் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்து வருவதால் கால்ஷீட் தேதிகளை தர்பாருக்கு ஒதுக்க முடியாமல் தவித்துள்ளார் இந்துஜா. பிறகு தர்பார் வாய்ப்பை ஏற்க முடியாத நிலையில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து அந்த கேரக்டரில் நிவேதா தாமஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.

Tags : Hinduja ,Darbar ,
× RELATED பழைய ஆவணங்களை டிஜிட்டல் மாயமாக்க நடவடிக்கை