×

முன்னழகை காண வேண்டும்; நடிகையிடம் இயக்குனர் கிளுகிளு

இயக்குனர் ஒருவர் நடிகை சுர்வீனிடம் கிளுகிளுப்பாக பேசி உசுப்பேற்றி இருக்கிறார். சுர்வீன் தமிழில், மூன்றுபேர் மூன்று காதல், புதிய தலைமுறைகள், ஜெய் ஹிந்த் 2 படங்களில் நடித்திருப்பதுடன் இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். 35 வயதானாலும் அழகு பொங்கி வழிய வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சுர்வீன் அளித்த பேட்டிகளில் காஸ்டிங் கவுச்களால் ஒருமுறை அல்ல இரு முறை அல்ல ஐந்து முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானதுபற்றி தெரிவித்திருக்கிறார். தற்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தன்னிடம் வெளிப்படுத்திய கிளுகிளு ஆசையை அம்பலத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

‘உன்னுடைய மேல் அழகை நான் பார்க்க வேண்டும்’ என்று இயக்குனர் ஒருவர் கேட்டார், அதேபோல் மற்றொருவர் ‘உன் தொடை அழகை நெருக்கமாக பார்க்க வேண்டும்’ என்றார். படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யும் ஆடிஷன்களுக்கு சென்றபோது 56 கிலோ உடல் எடையில்தான் நான் இருந்தேன்.

ஆனால் நான் ஓவர் வெயிட்டாக இருப்பதாக ஒரு இயக்குனர் கூறினார். அப்போது அந்த இயக்குனர் என்னிடம் வேறுஏதோ எதிர்பார்க்கிறார் என்பது தெரியவந்தது. பாலியல் தொல்லைகளை கடந்து தற்போது எனக்கென ஒரு இடத்தை திரையுலகிலும், டிவி உலகிலும் பிடித்திருக்கிறேன் என்றார் சுர்வீன் சாவ்லா.

Tags : Gluck ,actress ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!