×

பாஜக போராட்டத்தால் நிறுத்தப்பட்ட கார்த்தியின் சுல்தான் படப்பிடிப்பு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த மலைக்கோட்டையில் சிவனடியார்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் சமீபத்தில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத போது படப்பிடிப்பிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மலைக்கோட்டையில் இருந்து பட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : shooting ,Karthi's Sultan ,BJP ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...