தாய்ப்பால் ஊட்டும் நடிகைகள்

சாதாரண பெண்களே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு தயங்குகின்றனர். நடிகைகள் பற்றி கேட்க வேண்டுமா? இப்போதைக்கு திருமணமே வேண்டாம் என்று பல நடிகைகள் நடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வருடக்கணக்கில் இடைவெளிவிடுகின்றனர். நடிகை எமி ஜாக்ஸன் இவர்களிலிருந்து மாறுபட்டிருக்கிறார். திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானார்.

எமி ஜாக்ஸன், ஜார்ஜ் பனியோட்டோவை காதலிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அதேநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்ததுடன் குழந்தை பெற்ற பிறகு ஜார்ஜுடன் திருமணம் நடக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு வாரமும் தனது கர்ப்பம் பற்றி படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்ததுடன் கர்ப்பிணி தோற்றத்தில் யோகா, வெயிட் லிப்ஃப்டிங் போன்ற கடினமான உடற்பயிசிகளும் செய்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குடும்பத்தினர் வளைகாப்பு செய்து வைத்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எமி ஜாக்சசன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதை மகிழச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது குழந்தையை அணைத்து தாய்ப்பால் ஊட்டும் படத்தை பகிர்ந்திருக்கிறார் எமி. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடந்த மாதம் நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பிறந்தது. அவரும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை பெருமையாக தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Tags : Breastfeeding actresses ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி