பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன்

சீமராஜா படத்துக்கு பிறகு பொன்ராம் இயக்க உள்ள படத்தில் சசிகுமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு எம்ஜிஆர் மகன் என்று தலைப்பு வைத்துள்ளனர். சசிகுமார் ஜோடியாக டிக் டாக் பிரபலமான மிருணாளினி ரவி நடிக்கிறார். இதன் முதல் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கிராமத்து பின்னணியில் தனது ஸ்டைலில் ஜனரஞ்சகமான படமாக பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சசிகுமாருடன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

Related Stories:

More