திரிஷா படத்துக்கு யூ சான்றிதழ் தர மறுப்பு

திரிஷா நடித்த ‘96’ படம் வெற்றிபெற்றதையடுத்து அவருக்கு மவுசு கூடியிருக்கிறது. இதற்கிடையில் திரிஷாவை திருமணம் செய்துகொள்ள அவரது அம்மா வற்புறுத்திய போது திருமணம் செய்ய மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வருகிறார். மகளின் திருமணத்தை எண்ணி அவரது தாயார் கவலையில் இருந்தாலும் திரிஷா நடிப்பை பொறுத்தவரையில் மகிழ்ச்சியான நிலையில் உள்ளார்.

வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் என்றில்லாமல் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறார். ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் ஆசை  ‘பேட்ட’ படம் மூலம் நிறைவேறியது. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடித்திருக்கும் பரமபதம் விளையாட்டு படம் திகில் படமாக உருவாகியிருக்கிறது.

திருஞானம் இயக்கி உள்ள இப்படத்துக்கு யூ சான்றிதழை படக்குழு எதிர்பார்த் தது. சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி ‘யூ’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதில் திரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள் ளார். வில்லன்களை குரூரமாக பழிவாங்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

Related Stories:

>