×

சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் பிரபல நடிகர்களின் படங்களில் 2வது நாயகனாக நடிக்க கேட்டால் மறுக்காமல் ஏற்கிறார். ரஜினியுடன், ‘பேட்ட’ படத்தில் நடித்த விஜய் சேதுபதி அடுத்து சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

சிரஞ்சீவியுடன் விஜய்சேதுபதியும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். விஜய்சேதுபதி பற்றி புகழ்ந்த சிரஞ்சீவி, ‘சைரா... படத்துக்கு கடுமையாக விஜய்சேதுபதி உழைத்தார். என்னை எப்போதும் அண்ணா அண்ணா என்றுதான் கூப்பிடுவார்.

அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு பெரிய மகிழ்ச்சி’ என்று புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி திடீரென சிரஞ்சீவி அருகே சென்று அவர் காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத சிரஞ்சீவி ஒரு நொடி ஆடிப்போனார். பின்னர் விஜய் சேதுதிக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஆசி வழங்கினார். இந்த காட்சி நெட்டில் வைரலாகி வருகிறது.

Tags : Chiranjeevi ,
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!