×

யாருகிட்ட விளையாட்ற.... டாப்ஸியை துரத்திய எருமை

ஆடுகளம் டாப்ஸி தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். வடநாட்டில் துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியாக விளங்கும் 80 வயது பெண்மணியின் வாழ்க்கையை சித்தரிக்கும், ‘சான்த் கி ஆங்க்ஹா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பையும் முடித்துக்கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் டாப்ஸி அப்பகுதியில் அமர்ந்திருந்த எருமை மாடு ஒன்றின் அருகில் சென்று அதனிடம் கைகளை நீட்டி உணவு தருவதுபோல் பாவனை செய்தார். பின்னர் அதனிடம் கைநீட்டி நீட்டி பேசினார். கோபம் அடைந்த எருமை மாடு திடீரென்று எழுந்து டாப்ஸிைய துரத்தியது.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாப்ஸி அந்த இடத்தை விட்டு பறந்தார். பின்னர் இதுகுறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் மெசேஜில், ‘நீங்கள் விளையாட்டு மூடில் இருக்கலாம் அதையே மற்றொருவர் மீது திணித்து அவர்களையும் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினால் ஓட வேண்டியதுதான்’ என்றார்.

Tags :
× RELATED ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி