×

எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ; சமந்தாவை வாட்டும் பழைய நினைவுகள்

நடிகை சமந்தா தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தாலும் அவரது ஆரம்ப காலங்கள் கடினமாகவே இருந்தன. எல்லாவற்றும் சேர்த்து இப்போது சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். ஆனாலும் சில சமயம் அவர்  பழைய நினைவுகளுக்கு சென்று எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று தேட ஆரம்பித்துவிடுகிறார்.

சமீபத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோன்ற பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அத்துடன் ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார் சமந்தா. ‘ஆழமான காயங்களிலிருந்து உங்களின் ஆறுதலை தேடுங்கள்.

அங்கு உங்களை நீங்கள் அறிவீர்கள்... அங்கு உங்களின் நிம்மதியை கண்டறிவீர்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார். சமந்தா கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். தற்போது ‘96’ பட தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அடுத்து புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக சொந்த பணிகளுக்காக நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறாராம்.

Tags : Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி