×

லவ் பிரேக் அப் - தவிக்கும் இலியானா

இளவட்ட நடிகர், நடிகைகள் சிலர் டேட்டிங், காதல், பிரேக் அப் என நெட்டில் அறிவித்து வருகின்றனர். நடிகை இலியானாவின் காதலன் வெளிநாட்டை சேர்ந்த பாய் பிரண்ட் ஆண்ட்ரூ நீபோன். வருட கணக்கில் காதலித்து டேட்டிங்கில் ஈடுபட்டு வந்த அவருடன் கடந்த மாதம் பிரேக் அப் ெசய்து கொண்ட இலியானா, நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதேசமயம் பிரேக் அப் கவலைகளை மறக்க முடியாமல் தவித்து வருவதுடன், அதை வலுக்கட்டாயமாக மறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வெவ்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பது. நீந்துவது என தனது கவனத்தை திசை திருப்பி வருகிறார். சில தினங்களுக்கு முன் கடற்கரைக்கு சென்ற இலியானா, அங்குள்ள படகில் ஏறி சவாரி செய்தார். திடீரென்று சத்தமாக சிரித்தார். அந்த காட்சியை  புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ இப்படிக்கூடவா அசிங்கமாக சிரிப்பார்கள் என்று யாராவது கேட்டாலும் பரவாயில்லை.

சிலவற்றை மறக்க சத்தமாக சிரித்து பழக வேண்டியிருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது 2 படங்களில் நடிக்க இலியானாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதுகுறித்து பேசி வருகிறார். சம்பளம், கதாபாத்திரம், யார் ஹீரோ என்ற கணக்கெல்லாம் பார்த்து தேடி வரும் படங்களை ஏற்காமல் பிகு செய்து கைநழுவவிட்டால் அவரது பாடு திரையுலகில் திண்டாட்டம் ஆகிவிடும் என்கின்றனர் சிலர்.

Tags : Illyana ,
× RELATED இடுப்பழகை இதுக்குமேல் எப்படி நிரூபிக்க முடியும்; இலியானா கடு கடு