பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார்

சீமராஜா படத்துக்கு பிறகு பொன்ராம் இயக்க உள்ள படத்தில் சசிகுமார் நடிக்க இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கியவர் பொன்ராம். அடுத்து கிராமத்து பின்னணியில் தனது ஸ்டைலில் ஜனரஞ்சகமான படமாக இதை இயக்குகிறார்.

கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், எனை நோக்கி பாயும் தோட்டா, பரமகுரு படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவருக்கான தேர்வு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு உள்பட படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More