×

ஜெயலலிதா முகவார்ப்பில் கங்கனா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகிறது ‘தலைவி’. ஜெயலலிதா கதாபாத்திரத்தை கங்கனா ரனாவத் ஏற்கிறார். விஜய் இயக்குகிறார். இப்படத்துக்கு இந்தியிலும் தலைவி என்றே பெயர் வைக்க வேண்டும் என கங்கனா கேட்டுக்கொண்டார். அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார். தற்போது ஜெயலலிதா கெட்டப்புக்காக அவரது முகவார்ப்பை உருவாக்கும் மேக் அப் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதற்காக கங்கனா, விஜய் அமெரிக்கா சென்றனர். அமெரிக்காவில் உள்ள பிரபல மேக் அப் மேன்கள் கங்கனாவின் முகத்தில் புரோஸ்தெடிக் முறையில் ரப்பர் கூழ்போன்ற ஒரு கலவை பூசி அவரது முகவார்ப்பு எடுக்கப்பட்டது.

பின்னர் அதை ஜெயலலிதாவின் முகசாயலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு அதன்படி கங்கனாவின் முகஅமைப்புக்கு மேக் அப் அணிவிக்கப்பட உள்ளது. மணிக்கணக்கில் நடந்த இந்த மேக்அப் பணிகளில் கங்கனா படாதபாடுபட்டார். புரோஸ்தடிக் மேக் அப் அணிவது புதிதல்ல அவ்வை சண்முகி, இந்தியன் படங்களில் கமலும், எந்திரன், 2.0 படங்களில் ரஜினியும்  இதுபோன்ற மேக் அப் அணிந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kangana ,Jayalalithaa Agent ,
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...