×

4 பேரை காதலிக்கும் வேர்டு பேமஸ் லவ்வராக விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருபவர் விஜய் தேவர கொண்டா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டியர் காம்ரேட் படத்துக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு வேர்ல்டு பேமஸ் லவ்வர் என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகன்னா, கேத்ரின் தெரசா, பிரேஸில் மாடலான இஸபெல் ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கியிருக்கிறார். கிராந்தி மாதவ் இப்படத்தை இயக்குகிறார்.

கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று தொடங்கியது. கிரியேட்டிவ் கமர்ஷியல் என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags : Vijay Deverakonda ,Word Badass Lover ,
× RELATED நோய் தொற்றில் இருந்து...