×

சைக்கோ கொலைகாரன் வேடத்தில் ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்துள்ள படம் மிருகா. தயாரிப்பு, ஜாக்குவார் ஸ்டுடியோஸ் பி.வினோத் ஜெயின். இசை, அருள் தேவ். இயக்கம், ஜே.பார்த்திபன். கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு: பன்னீர் செல்வம். படம் குறித்து அவர் கூறியதாவது: குரூர மனம் படைத்த கொலைகாரன், பல பெண்களை ஏமாற்றி வாழ்கிறான். பிறகு ஒரு பெண்ணை காதலித்து திருமணம்  செய்கிறான்.

வழக்கம்போல் அவளை ஏமாற்ற முயற்சிக்கும் போது, விதி வேறுவிதமாக செயல்படுகிறது. தனக்கு சிக்கலான சூழல் ஏற்படும்போது, ஒரு பெண் எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ள படம் இது. சைக்கோ கொலைகாரனாக ஸ்ரீகாந்த், ஏமாற்றப்பட்ட பெண்ணாக ராய் லட்சுமி நடித்துள்ளனர். 38 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நான், முதல்முறையாக இப்படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன். அடுத்து பிரபுதேவா  நடிக்கும் படத்தின் மூலம் இயக்குனராகிறேன்.

Tags : Srikanth ,psycho killer ,
× RELATED யோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்