×

கர்ப்பிணி கோலத்தில் மாடலிங் - எமி ஜாக்ஸன்

காதலன் ஜார்ஜை கைப்பிடிக்கவிருக்கும் நடிகை எமி ஜாக்ஸன் தற்போது  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கர்ப்பமடைந்து 33 வாரம் ஆகியிருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயரும் வைத்து விட்டார். கர்ப்பமாக இருக்கும்போது, இப்படி உட்காரக்கூடாது, கடினமான வேலைகளை செய்யக்கூடாது என்ற பெரிசுகளின் அட்வைஸையெல்லாம் தூரவைத்துவிட்டு நீந்துவது, யோகாசனம் செய்வது என வழக்கத்தைவிட கடினமான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார் எமி. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள். எமியும் அப்படித்தான்.

படப்பிடிப்பில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளுக்கு மத்தியில் நடித்துவிட்டு வீட்டு அறைக்குள் டிம் லைட் வெளிச்சத்தில் இருக்க முடியவில்லை. இதையடுத்து தனது புகைப்பட நிபுணரை வரவழைத்து போட்டோ ஷூட் நடத்தச் சொன்னார். பிரத்யேகமாக ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளுக்கு மத்தியில் கர்ப்பிணி கோலத்திலேயே மாடலிங் போஸ் தந்தார். அந்த படங்களையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் எமி.

Tags : Emy Jackson ,
× RELATED பாவப்பட்ட மக்களை சுரண்டுவதிலேயே...