×

கட் அவுட்கள் வேண்டாம் : ரசிகர்களுக்கு விஜய், சூர்யா திடீர் கட்டுப்பாடு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம், காப்பான். இப்படம் குறித்து சூர்யா கூறியதாவது: பிரதமரின் பாதுகாப்புக்காக இயங்கும் டீம், எஸ்பிஜி என்கிற ஸ்பெஷல் புரொடக்‌ஷன் குரூப். அந்த டீமை சேர்ந்த ஒருவரது வாழ்க்கையை பற்றி பேசும் இந்த கதையில் நடித்துள்ளேன். இப்படம் வரும் 20ம் தேதி ரிலீசாகிறது. எனது ரசிகர்கள் எந்த ஊரிலும் கட்அவுட் மற்றும் பேனர்கள் வைக்க வேண்டாம்.

நமது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதற்கு ஏற்ப நமது புரிதல் இருக்க வேண்டும். கட்அவுட், பேனர் வைத்துதான் என்னை சந்தோஷப்படுத்த  வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள் மற்றும் ரத்த தான நிகழ்ச்சிகளே போதுமானது. மற்றவர்களுக்கு செய்யும் உதவி மூலம் நமது சந்தோஷத்தை பரிமாறிக்கொள்வோம் என்றார்.

வரும் 19ம் தேதி சென்னையில் நடக்க உள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்று, விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பேனர் வைக்க மாட்டோம் என அஜித் ரசிகர்களும் ஆங்காங்கே ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Vijay ,Surya ,fans ,
× RELATED விசிலடிக்க வைத்த விஜய்