அமெரிக்க வாழ்க்கையை கொண்டாடும் மம்தா

சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். பின்னர் தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கச் சென்றார். பின்னர் பிரஜித் என்பவரை மணந்தார். ஒரு வருடத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பட்ட காலிலேயே படும் என்பதுபோல் மம்தாவுக்கு இளம் வயதிலேயே உடல்நலன் பாதிக்கப்பட்டதால் நடிப்புக்கு இடை வெளிவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியதுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு வந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று செட்டிலாகி 5 வருடம் ஆனதையடுத்து அதை கொண்டாடிய மம்தா, ‘லாஸ்ஏஞ்சல்ஸ் நகரம் மட்டும் ஒரு நபராக இருந்தால் அது என்னுடையவராகியிருக்கும். என் வாழ்க்கையின் பயணம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் இன்னும் என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறது’ என அந்நகரின் மீதான பாசத்தை கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Related Stories:

>