×

கோவையில் சாமியார் வீட்டில் பதுக்கிய 300 கிலோ வெண்கல முருகர் சிலை மீட்பு

கோவை:  கோவை உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (45). இவர், வீட்டில் ஜோதிடம், மாந்திரீக பூஜைகள் செய்து வந்தார். இவர், சுவாமி சிலைகள் உரிய அனுமதியின்றி செய்து விற்பனை செய்வதாக தகவல் வெளியானது.இதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இவர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் முருகர் சிலை இருந்தது. 4 அடி உயரத்தில் 300 கிலோ எடையில் இருந்த இந்த சிலை, வெண்கலத்தில் செய்திருப்பதாக தெரிகிறது. சிலை பீடம் மற்றும் தாங்கும் பகுதி 100 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலையை விற்பனை செய்ய இவர் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். ஆண்டி அலங்கார கோலத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருந்தது. நீண்ட காலம் பூஜை செய்த சக்தி வாய்ந்த சிலை எனக்கூறி பாஸ்கர், சிலையை விற்க முயற்சி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.ஐம்பொன் எனக்கூறி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இவர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. போலீசார் அனுமதியின்றி வைத்திருந்ததாக விசாரித்து வருகின்றனர். இவர் வைத்திருந்த சிலையை போலீசார் மீட்டனர்.இந்த சிலை தற்போது காந்திபுரத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை குறித்த தகவல் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிலை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாஸ்கர் சிலையை திருப்பூரில் இருந்து வாங்கியதாக தெரிகிறது.ஏற்கனவே இவர் சில சிலைகளை விற்பனை செய்திருப்பதாக தெரிகிறது.மேலும், இவர் தனது வீட்டின் அருகே சிலை தயாரிக்க பட்டறை அமைத்திருந்தார். அதில் இரும்பு பொருட்களை உருக்கி சிலை தயாரிக்கும் பணியை செய்து வந்தார். அந்த பட்டறையிலும் போலீசார் சோதனை நடத்தினர். சிலை தயாரிப்பது போன்ற போட்டோ, வீடியோக்களை பாஸ்கர் வைத்திருந்தார். இதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post கோவையில் சாமியார் வீட்டில் பதுக்கிய 300 கிலோ வெண்கல முருகர் சிலை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Bhaskar ,Ukkadam Selvapuram Bypass Road, Coimbatore ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...