×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவு: தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை

சென்னை: நேற்றைய தினம் (5.11.2022) தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 10.04 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக  45.93 மி.மீ. பெய்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை விபரம் கனமழை (64.5 முதல் 115.5 மி.மீ. வரை)வ.எண்.                  மாவட்டம்             மழைமானி நிலையம்        பதிவான மழை அளவு (மி.மீ.)    1                      கன்னியாகுமரி         கொட்டாரம்                                        70.40    2                      இராமநாதபுரம்         இராமேஸ்வரம்                                77.60    3                      தூத்துக்குடி                 குலசேகரப்பட்டினம்                        67.00    4                      நாகப்பட்டினம்                 கோடியக்கரை                                87.00நேற்று சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பும் ஆக மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4.00 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக;* 25 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது.* 140 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்* இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (37+6 = 43)* 4.11.2022 முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 64 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று (5.11.2022) அன்று விழுந்த 1 மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.* மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் 250 நீர் இறைப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.* 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 நிவாரண மையங்களில் 35 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. * மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று (5-11-2022) 23,838 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.* அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.*5-11-2022 பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.* கனமழை (64.5 முதல் 115.5 மி.மீ.)  – தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.* 6-11-2022 பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கனமழை (64.5 முதல் 115.5 மி.மீ.)  – செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.* 9-11-2022 அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 4.11.2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.* தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.* இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 394 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 244 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 150 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 206 தொலைபேசி அழைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 132 அழைப்புகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.* இன்று காலை 10.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 21.03 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 539 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.* அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.80 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 373 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது….

The post தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவு: தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Disastrophe Risk Reduction Agency ,Chennai ,Nagapattinam district ,post Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...