×

பள்ளி தலைமையாசிரியர் தண்டனை 40 மாணவர்களுடன் ஓடிய மாணவன் மயங்கி விழுந்து சாவு

அணைக்கட்டு: அரசு பள்ளி தலைமையாசிரியர் விதித்த தண்டனைக்காக ஓடிய மாணவன் மயங்கி விழுந்ததில் இறந்தான். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த டெய்லர் குப்பன், லாவண்யா தம்பதியின் மகன் மோகன்ராஜ்(13), 9ம் வகுப்பு படித்து வந்தார். 2வது மகனும் இதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 9ம் வகுப்பு இ பிரிவு மாணவர்கள் சத்தமிட்டு பேசி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதையறிந்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அந்த மாணவர்களை பள்ளி முழுவதும் 4 சுற்று ஓடி வரும்படி தண்டைனை விதித்துள்ளார். அதன்படி 40 பேரும் 4 சுற்றுகள் ஓடியுள்ளனர். இதில் இரண்டு ரவுண்டு ஓடியதுமே மோகன்ராஜ் விழுந்துள்ளார்.  ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பெற்றோருக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். அவர்களிடம் மயக்கமாக வருவதாக மோகன்ராஜ் கூறவே, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கும்போது திடீரென வலிப்பு, மாரடைப்பு ஏற்பட்டு மோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். …

The post பள்ளி தலைமையாசிரியர் தண்டனை 40 மாணவர்களுடன் ஓடிய மாணவன் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Government of Vellore District ,
× RELATED வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம்...