×

விலை உயர்ந்த ராசிக்கல் எனக்கூறி நூதன முறையில் நகை அபேஸ்: 2 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (61).  இவர் கடந்த 5ம் தேதி தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், அன்பழகன் இடம் தங்களுக்கு அவசரமாக பண தேவை உள்ளது எனவும், தங்களிடம் உள்ள விலை உயர்ந்த ராசிக்கல்லை உடனே விற்க முடியவில்லை எனவும், அதனால் அதை வைத்துக்கொண்டு பணமாக அல்லது நகையாக கொடுத்தால் போதும் என கூறி அன்பழகன் அணிந்திருந்த சுமார் ஒன்றரை சவரன் செயின் மற்றும் மோதிரத்தை வாங்கிகொண்டு அங்கிருந்து மாயமாகியுள்ளனர். பின்னர், அன்பழகன் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் வேலூரை சேர்ந்த ஜமால் நாசர் (64), அந்திரியாஸ் (51) ஆகிய 2 பேரையும் கைது செய்து நகையை மீட்டனர்….

The post விலை உயர்ந்த ராசிக்கல் எனக்கூறி நூதன முறையில் நகை அபேஸ்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kolanbakam ,Anprajakan ,Dhambaram Bus Station ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...