×

தீவிபத்து, நச்சுத்தன்மை புகையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பூர்: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கொடுங்கையூர் பகுதியில் ஏசி வெடித்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம், சமீபத்தில் பிரிட்ஜ் வெடித்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் உள்ளிட்டவை பொதுமக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் மின்சாதன பொருட்கள் வெடித்து தீ பரவும்போது, அதிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும், மின்சாதன பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முன்தினம் வியாசர்பாடி வேளாங்கண்ணி பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.வடசென்னை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் உத்தரவின்பெயரில், வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்குச்சென்று பள்ளி மாணவ, மாணவிகளின் வீட்டில் உள்ள பிரிட்ஜ், ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் தீ விபத்து ஏற்பட்டு, அதிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் குளோரைடு, போன்ற புகையினை நாம் உட்புகாமல் இருக்க உடனடியாக பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கி கூறினார்.மேலும், முககவசம் அல்லது கைகுட்டை வைத்து வாய் மற்றும் முக்கை மூடிக்கொண்டு வெளியேறுவது புகைமூட்டம் அதிகமாக இருந்தால் முகத்தை தரையில் வைத்து தவழ்ந்து வெளியேறுவது உள்ளிட்ட காட்சிகள் பள்ளி மாணவ மாணவியருக்கு தத்ரூவமாக செய்து காண்பிக்கப்பட்டன. மேலும், வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை மழைக்காலங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்….

The post தீவிபத்து, நச்சுத்தன்மை புகையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai ,Kodungayur ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்