×

கியா கேரன்ஸ்

கியா கேரன்ஸ் கார் கடந்த பிப்ரவரி 15ம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, அறிமுகச் சலுகையில் ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது வேரியண்ட்களுக்கு ஏற்ப சுமார் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலானவை ரூ.30,000 உயர்ந்துள்ளது. கியா கேரன்சின் டாப் மாடலான டீசல் 6ஏடி லக்ஸரி பிளஸ் 7 சீட்டர் ஷோரூம் விலை ரூ.16.99 லட்சத்தில் இருந்து ரூ.17.99 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, அறிமுகச் சலுகை விலையில் இருந்து மாடலுக்கு ஏற்ப சுமார் ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கேரன்ஸ் காரின் துவக்க விலை ஏறக்குறைய ரூ.10 லட்சத்தை நெருங்கியுள்ளது. 1.4 லிட்டர் மேனுவல் பிரீமியம் மற்றும் பிரஸ்டீஜ் மாடல்கள் ரூ.10,000 அதிகரித்துள்ளது. இதன்படி இந்த மாடல்களின் விலை சுமார் ரூ.11.30 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை உள்ளது….

The post கியா கேரன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Kia Carens ,Kia Garance ,Indian ,Kia Carans ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...