×

திருமணத்துக்கு தயாரா - லட்சுமி மேனன்

கடந்த  2016ல் வெளியான படம், றெக்க. அதில் நடித்திருந்த லட்சுமி மேனன், பிறகு  பிரபுதேவா ஜோடியாக யங் மங் சங் படத்தில் ஒப்பந்தமானார். இதற்கிடையே,  திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக அவரைப்  பற்றி தகவல் பரவியது. இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ்  படத்தில் நடித்து இரண்டு வருடங்களாகி விட்டது. உடனே அதுபற்றி வதந்தி பரப்புகிறார்கள்.

இனி நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று எப்போதும்  சொன்னதில்லை. தற்போது நடன ஆசிரியையாக இருக்கிறேன். என்னிடம் நடனம் பயிலும்  மாணவர்களின் அரங்கேற்றம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு  முழுமையான பயிற்சி அளிக்கும் பணியில் என்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறேன்.  மேற்கொண்டு என் படிப்பையும் தொடர்கிறேன்.

தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடித்த சிப்பாய் படம் பற்றி எதுவும் தெரியவில்லை. பிரபுதேவாவுடன் யங் மங்  சங் படத்தில் நடிக்கிறேன். சினிமாவில் எனக்கு ஏற்பட்ட இடைவெளிக்கு நான்தான்  காரணம். நடிப்பை எந்த வயதில் வேண்டுமானாலும் தொடர முடியும். ஆனால்,  படிப்பை அதற்குரிய காலகட்டத்தில் முடிப்பதுதான் நல்லது. வீட்டில் எனக்கு  மணமகன் தேடுவதாக வரும் தகவல் உண்மை இல்லை. என் திருமணம் பற்றி இப்போது  யோசிக்கவில்லை.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...