ஆதிக்கு ஜோடி அகன்ஷா சிங்

ஆதி நடிப்பில் உருவாகும் படம் க்ளாப். பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார். பிருதிவி ஆதித்யா இயக்குகிறார். ஆதிக்கு ஜோடியாக அகன்ஷா சிங் நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், நாசர், கிருஷ்ணா குரூப், முனீஸ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் ஷெட்யூலில் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இளையராஜா இசையமைக்கிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு. ஐதராபாத்தில் தடகள ஸ்டேடியம் செட் போடப்பட்டு வருகிறது. அங்கு அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது.

Tags :
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி